பாடசாலை மாணவர்களுக்கான சகல தேர்வுகளுக்கும் ஒன்லைனில் விண்ணப்பம்- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

0

பாடசாலை மாணவர்களுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை இந்த வருடம் முதல் இணைய முறையின் (Online) கீழ் இடம்பெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது நோக்கமாகும். தொடர்ந்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களும் இணையமூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சகல மாணவர்களுக்கும் தனியான இலக்கம் இதன் கீழ் வழங்கப்படவிருக்கின்றன.

மாணவர்களின் பெறுபேறுகள் உள்பட வெளிக்கள செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.