நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்படும் மணல் மற்றும் மரக்குற்றிகளை ஆலயங்களுக்கு சலுகை விலையில் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

0

சட்டத்துக்குப் புறம்பாக ஏற்றிக் கொண்டு சென்ற குற்றத்துக்கு நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட மணல் மற்றும் மரக்குற்றிகளை மதத் தலங்களின் கட்டட நிர்மாணப் பணிகளுக்கு மட்டும் சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீதி மற்றும் மனித வள, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் முன்வைக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களினால் அரச உடமையாக்கப்பட்ட மணல் மற்றும் மரக் குற்றிகளை மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அரச நிறுவனங்களை நிர்மாணிப்பதற்கும், செப்பனிடும் நடவடிக்கைகளுக்காகவும் சலுகை விலைக்கு வழங்குவதற்கு 2016ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு சலுகை விலைக்கு வழங்கும் காலத்தை அடிக்கடி நீடித்து இறுதியான ரீதியில் 2019.12.31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. மேலும் மத வழிபாட்டு தலங்களுக்காக மாத்திரம் தேவையான மணல் மற்றும் மரப் பலகைகளை வழங்கக்கூடிய வகையில் இதன் நடைமுறையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்காக நீதி மற்றும் மனித வள மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here