யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

0

யாழ்ப்பாணத்தில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை பவுணுக்கு 350 ரூபாயால் உயர்ந்து 71 ஆயிரத்து 300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டொலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (பெப்ரவரி 15) ஒரு பவுண் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கரட்) 350 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 70 ஆயிரத்து 950 ரூபாயாக இருந்தது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 400 ரூபாய் உயர்ந்து, 77 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 77 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்தது.