ஐதேக தலைமையிலான முன்னணி அன்னம் சின்னத்தில் போட்டி – நவீன் எம்.பி அறிவிப்பு

0

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேர்தல் கூட்டணி ‘சமகி ஜன பலவேகயா’ (SJB) என்ற முன்னணியின் கீழ் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் அணி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க இன்று மாலை வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான தேர்தல் கூட்டுக்கு  ‘ஐக்கிய தேசிய சக்தி’ என பெயரிடப்பட்டு இதயம் சின்னத்தை வழங்கி ஒப்புதல் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணி அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன் யானை அல்லது அன்னம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேர்தல் கூட்டணிக்கு சமகி ஜன பலவேகயா’ (SJB) எனப் பெயரிடப்பட்டு அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் அணி அறிவித்துள்ளது.