தங்கத்தின் விலை 81 ஆயிரம் ரூபாயை எட்டியது – தொடர் அதிகரிப்புக்கு இவைதான் காரணம்

0

இலங்கையில்  தங்கத்தின் விலை இன்றும் வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின்  விலை 81 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

கோரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளமை காரணமாக கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை எகிறி வருகிறது.

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பங்குச்சந்தைகளில் செய்யப்படும் முதலீடு குறைந்து, அது தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும், கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் விலை ஒரு பவுணுக்கு 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. . இனி வரும் நாள்களிலும், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்க நகைகள் வாங்க காத்திருக்கும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (பெப்.24) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்)  74 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினம் 73 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை   பவுணுக்கு 81 ஆயிரம் ரூபாயாக  விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுமுன்தினபம் 80 ஆயிரத்து 300 ரூபாயாகக் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here