இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

பகிடிவதையால் இடைவிலகிய பல்கலை. மாணவர்களை மீள இணைக்க விண்ணப்பங்கோரல்

0

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கற்கையை இடைநிறுத்திய மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கான விண்ணப்பங்கள் உயர் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

“பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கற்கையை கைவிட்டுச் சென்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் கற்றறிந்தவர்களை உள்ளடக்கி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்கப்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதுதொடர்பான மேலதிக தகவல்களை உயர் கல்வி அமைச்சில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here