பொன் அணிகளின் போர் நாளை ஆரம்பம்

0

பொன் அணிகளின் போர் என்று அழைக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நாளை ஆரம்பமாகிறது.

நாளைக் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி இரண்டு இன்னிங்ஸ்களாக இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையில் 1917ஆம் ஆண்டிலிருந்து இந்தத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்று வருகின்றது. போர்க் காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்றுவந்தவேளை 2014ஆம் ஆண்டு போட்டியின்போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான ஒருநாள் ஆட்டம் மட்டும் நடைபெற்றது.

இந்த வருடம் 103ஆவது வருட பொன் அணிகளின் போரும், 28ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட ஆட்டமும் ரி-20 ஆட்டமும் நடைபெறவுள்ளன.