‘வடக்கின் பெரும் சமர்’ கோலாகல ஆரம்பம் – யாழ்.மத்திய கல்லூரியில் முதலில் துடுப்பாட்டம்

0

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
இன்று (மார்ச் 5) வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 114ஆவது போட்டியாகும்.

விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென் ஜோன்ஸ் கல்லூரியினரும் இன்றைய 114வது போட்டியில் களம் இறங்கினர்.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் பி.துஷிதரன் ஆகியோர் தலைமையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீர்ர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி தலைவர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.

படங்கள்  – ஐ.சிவசாந்தன்