பெரியமுள்ள உணவகத்துக்குள் ஒருவர் வெட்டிக்கொலை; இருவர் படுகாயம்; வானில் வந்த கும்பல் வெறிச்செயல்

0

நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் ஏற்பட்ட குழப்ப நிலையில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் உணவகத்துக்குள் புகுந்த கும்பல் ஒன்று குழப்பை ஏற்படுத்தியதுடன், உணவக ஊழியர் ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளது. மேலும் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொலை இடம்பெற்றதையடுத்து அந்தக் கும்பல் வானில் ஏறித் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here