தங்கத்தின் விலை இன்றும் சரிவு – 3 நாள்களில் 4,500 ரூபா வீழ்ச்சி

0

யாழ்ப்பாணத்தில் தங்கம் விலை இன்று மேலும் குறைவடைந்துள்ளது. கடந்த முன்று நாள்களில் 4  ஆயிரத்து 500 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

கோரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால்ல தங்கத்தின் விலை கடந்த மாதம் 18ஆம் திகதி தொடக்கம் உயவடைந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

அதன்பின்னர் ஏற்றம் இறக்கம் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த மார்ச் 6ஆம் திகதி புதிய உச்சத்தை எட்டியிருந்தது. தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்த நிலையில் தங்கத்தின் விலை 3 நாள்களில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (மார்ச் 14) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்)  70 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 71 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை   பவுணுக்கு 76 ஆயிரத்து 500 ரூபாயாக  விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 78 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்பட்டது.