கோரோனா தொற்றுக்குள்ளாகிய மூன்றாவது நோயாளியும் முழுமையாகச் சுகமடைந்தார்

0

கோரோனா (COVID 19) தொற்றுக்குள்ளாகி கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நோயாளியும் (முதலாவது சீனப் பெண் உள்பட) முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார சேவைகள் மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

மூன்றாவது நோயாளி இன்று கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார் என்று பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கையில் இதுவரை கோரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 பேரில் மூவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 99 பேர் 3 வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கோரோனா வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகளுடன் 255 பேர் தற்போது நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.