கோரோனா தொற்றுள்ள எவரும் இன்று இனங்காணப்படவில்லை – சுகாதார அமைச்சர் தகவல்

0

நாட்டில் இன்று (மார்ச் 25) புதன்கிழமை மாலை 4.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களின் நிலவரத்தின் அடிப்படையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

அத்தோடு நேற்று வரை 102 பேர் கோரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் (ஜனவரியில் இனங்காணப்பட்ட சீனப் பெண் உள்பட) முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாடுமுழுவதும் உள்ள 22 வைத்தியசாலைகளில் 255 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.