அடுத்த வாரமும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனம்

0

மார்ச் 30ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் திகதிவரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் நாளை 27ஆம் திகதிவரை அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் அடுத்த வாரமும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் விடுமுறையாகக் கொள்ளப்படாது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தவிர்ப்பதற்கு அஅரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாகும்.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாக கருதப்படமாட்டாது. மக்கள் சேவையை தொடர்ச்சியாக பேணுவது அரசின் பொறுப்பாகும். எனினும் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுய நோய்த் தடுப்புக் காப்புக்கு இடமளிப்பது இதன் நோக்கமாகும்.

மார்ச் 20 முதல் 27 வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை குறித்த காலப்பகுதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்க அஅரசு தீர்மானித்துள்ளது.