அரச துறை ஊழியர்களது ஏப்ரல் சம்பளம் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் – திறைசேரியின் செயலாளர் அறிவிப்பு

0

அரச துறை உத்தியோகத்தர்களில் ஏப்ரல் மாத சம்பளம் வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டும் என்று திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

அரச துறை உத்தியோக்கத்தர்களின் ஏப்ரல் மாதம் சம்பளம் வரும் 7 ஆம் திகதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கோரோனா வரைஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச துறைகள் முடங்கிப்போயுள்ளன.

இந்த நிலையில் அரச துறை உத்தியோகத்தர்களது ஏப்ரல் மாதச் சம்பளம் வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார்.