ஊரடங்குச் சட்டம் நடைமுறை பற்றி ஜனாதிபதி செயலகத்தின் புதிய அறிவிப்பு

0

மத்திய, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று ஜனாதிதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீளவும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, மார்ச் 27 வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

இம்மாவட்டங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here