கோரோனா தொற்றுள்ள மேலும் இருவர் அடையாளம்; நோயாளிகள் எண்ணிக்கை 104ஆக உயர்வு

0

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை  மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 6 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 237 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, இன்று மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுள்ள எவரும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here