பொலிஸாரின் விடுப்புகள் ஏப்ரல் 10வரை இடைநிறுத்தம்

0

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புகளுக்குமான அனுமதியை வரும் ஏப்ரல் 10ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுத்து வரும் பணிகளில் பொலிஸாரின் சேவை மிக அத்தியாவசியமாகக் காணப்படுவதால் அனைத்து தர பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புக்கான அனுமதியை இடைநிறுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.