வடமராட்சி கிழக்கு குடாரப்பு மக்களுக்கு அங்கஜன் இளைஞர் அணியால் உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது

0

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் வருமானம் குறைந்த குடும்பங்கள் மூன்று நேர உணவுக்கே முடியாத நிலையில் உள்ளதாக ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்திய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் இன்று வியாழக்கிழமை அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியால் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் உழைத்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.

இந்தக் காணொலி நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணி கடந்த 5 நாள்களில் 15 ஆயிரம் உலர் உணவுப் பொதிகளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வழங்கிவைத்துள்ளது என்று அந்த அணியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

எனினும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கஜன் இராமநாதனை இந்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் நாள்களிலும் மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணி ஏற்பட்டாளர், தேவையுடையோர் தமது பிரதேச இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.