கோரோனா பாதிப்பு: இத்தாலியில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழப்பு

0

இத்தாலியில் கோரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இன்று ஒரே நாளில் 969 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் கோரோனா தொற்றுக்குள்ளாகி அதிகம் பேர் உயிரிழந்தது இதுவே முதல் தடவையாகும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் கோவிட்-19 தொற்றுக்குள்ளாக உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 பேராக அதிகரித்துள்ளது.

சுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுளனர். இதில் 35,648 பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3,612 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 753 பேர் சாதாரண வார்டுகளில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 (கோரோனா வைரஸ்) காய்ச்சலால் ஐரோப்பிய நாடான இத்தாலி பெரும் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இத்தகைய மோசமான இறப்பு விகித்தத்துக்கு அங்கு முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் 19 தொற்றுக்கு சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here