உங்கள் முதல்வனின் எந்தவொரு ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை – கட்சி ஒன்றின் அடாவடித் தனத்தால் குழப்பமடையவேண்டாம்

0

உங்கள் முதல்வன் ஊடகத்தின் ஊடகவியலாளரும் தாக்கப்படவில்லை என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

கட்சி ஒன்றினால் எமது முதல்வன் என்ற பெயரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அந்த இணைய ஊடகம் தொடர்பில் உங்கள் அபிமானம் பெற்ற முதல்வன் இணையத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கிலும் இருந்தும் முதல்வன் ஊடகவியலாளருக்கும் அலுவலகத்துக்கும் என்ன நடந்தது என்று ஒவ்வொரும் கேட்பதனால் இந்தப் பதிவை முதல்வன் வெளியிடுகிறான்.

எந்தவொரு தரப்புடனும் அடாவடித்தனம் செய்யவோ ஊடகம் அறம் கடந்து நடக்கவோ அல்லது கட்சிகளுக்காக இயங்கவோ முதல்வன் முயற்சிக்கமாட்டான்.

உரிய நடைமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும் உங்கள் முதல்வன் எப்போதும் உங்களுக்கு உண்மைகளை வழங்குவான் என்று உறுதியளிக்கின்றான்.

தேர்தல் அரசியலுக்காக இன்னுமொரு இணையத்தள செய்தி ஊடகத்தின் பெயரைப் பயன்படுத்தும் அந்தக் கட்சியினர் கண்டனங்களை விடுவதில் ஆச்சரியமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here