களுபோவில வைத்தியசாலையின் ஒரு விடுதிக்கு சீல்; 20 மருத்துவ சேவையாளர்கள், 15 நோயாளர்கள் தனிமைப்படுத்தல்

0

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை விடுதி ஒன்று மூடப்பட்டு அங்கு கடமையாற்றிய மருத்துவ சேவையாளர்கள் 20 பேரும் நோயாளிகள் 15 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் சார்ந்த சிகிச்சை விடுதி மூடப்பட்டுள்ளது.

அதனால் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் 15 பேர் மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்பட 20 மருத்துவ சேவையாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here