இன்று மேலும் 10 பேருக்கு கோரோனா; நோயாளிகள் எண்ணிக்கை 132ஆக உயர்வு

0

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 10 பேர் இன்று (மார்ச் 31) செவ்வாய்க்கிழமை  மாலை 4.15 மணிவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 16 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 173 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here