வடக்கு – கிழக்கில் மே 18 பயன்தரு மரம் நடுகை; மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள இவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்

0

மே 18, 2009ம் ஆண்டு போர் முடிவில் உயிர்நீத்தோரின் நினைவு நாள் வரும் மே மாதம் 18ந் திகதியன்று நாங்கள் பயன்தரு மரங்களை நடுவதற்கு உத்தேசித்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் பயன்தரு மரங்களை காலையில் நடுங்கள். மரக் கன்றுகளை எம்மவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அவர்கள் விவரம் பின்வருமாறு.
யாழ்ப்பாணம் மாவட்டம் –
கந்தையா இராஜதுரை – 0718584882

வவுனியா மாவட்டம் – விநாயகமூர்த்தி குககேசன் – 0775024784

மன்னார் மாவட்டம் – ஆறுமுகம் செல்வேந்திரன் – 0774349363

முல்லைத்தீவு மாவட்டம் நடனசாபாபதி வன்னியராஜா – 0775027674

கிளிநொச்சி மாவட்டம் – கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) – 0776550030

திருகோணமலை மாவட்டம் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) – 0753113541

மட்டக்களப்பு மாவட்டம் – எம்.உதயராஜ் – 0779080697; 0713109938

எமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நடும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள். கோரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நடும் செயற்பாட்டை முன்நடத்துங்கள்.

அதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18-18-18ன் போது நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம்.

18-18-18 என்றால் மே 18ந் திகதி மாலை 6 மணி 18 நிமிடங்கள். அந்த நேரம் வரும்போது விளக்கேற்றுங்கள். இதனை எமது புலம் பெயர்ந்த உறவுகளும் தாம் வாழும் நாடுகளில் அவர்கள் நேரத்திற்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றார்கள்.

ஒட்டுமொத்த தமிழினமே உலகளவிய ரீதியில் இதைச் செய்வதால் நாம் இரண்டு விடயங்களை நிலை நிறுத்தப் போகின்றோம். ஒன்று உயிர்நீத்தோர் அனைவரும் எமது உறவுகள். அவர்களை அன்றைய தினம் நாம் நினைவில் இருத்துகின்றோம் என்பது. இரண்டு அன்று நடந்தது எமக்கெதிரான இனப்படுகொலையின் ஒரு அம்சம்.

அரச படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பது. இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று பணிவன்புடன் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
14.05.2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here