பெற்றோலின் விலையை 5 ரூபாயால் மீளவும் குறைத்தது லங்கா ஐஓசி

0

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (லங்கா ஐஓசி) 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாயால் மீளவும் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 137 ரூபாயாகக் காணப்படும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கும் பெற்றோலின் விலையை 5 ரூபாயால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகரித்தது. எனினும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையை அதிகரிக்காது என்று எரிசக்தி அமைச்சு அறிவித்தது.

இந்த நிலையில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ) 92 ஒக்டைன் பெற்றோலின் விலையை மீளவும் குறைத்துள்ளது.