இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

நல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 14 பேரும் அமைச்சரின் தலையீட்டால் ரௌடிகளாக மாற்றப்பட்டனரா? கட்சியைக் காப்பாற்றுவதில் பொலிஸார் உதவி

0

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபியின்) வேட்பாளர் சட்டத்தரணி மு.றெமிடியஸின் அழைப்பின் பேரில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக நல்லூரில் இளைஞர்கள் 14 பேர் ஒன்றுகூடிய நிலையில் கைது செய்யப்பட்ட போதும் தேர்தல் விதியை மீறியமை அல்லது தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறியமை என்ற குற்றச்சாட்டுக்களின் வழக்குச் செய்யாது புதிய வகையில் யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தமை அமைச்சர் ஒருவரின் தலையீடு உள்ளமை வெளிப்படுகிறது.

அத்தோடு ஆதாரங்கள் – சான்றுப்பொருள்கள் எவையும் முன்வைக்காமல் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம் நீதிமன்றில் பி அறிக்கையை தாக்கல் செய்யும் புதுவித நடைமுறையை யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கையாண்டு வருகின்றார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கடந்த திங்கட்கிழமை இருவரின் பிறந்தநாள் கொண்டாடிய 26 பேர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சட்டவிரோத கூட்டம் கூடியமை மற்றும் வன்செயலில் ஈடுபடும் திட்டத்துடன் கூடியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சிறுவர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய 24 பேரும் வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்துக்கு அண்மையாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஜஸ்கிறீம் கடைக்கு அருகாமையில் நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபியின்) வேட்பாளர் சட்டத்தரணி மு.றெமிடியஸின் தலைமையில் இளைஞர்கள் 10 பேர் கூடியிருந்தனர்.அவர்களுக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு வந்த யாழ்ப்பாணம் பொலிஸார் இளைஞர்கள் அனைவரையும் கைது செய்து சென்றனர். சட்டத்தரணி மு.றெமிடியஸிடம் பொலிஸார் ஏதோ தெரிவித்துச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 14 பேரையும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் 14 பேரும் முற்படுத்தப்படவில்லை.

சந்தேகநபர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“நல்லூரில் ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகே ஒன்று திரண்ட காரணத்தைக் கூற முடியாது காணப்பட்டமை மற்றும் வடக்கின் பல்வேறு இடங்களிலிருந்து ஒன்றுகூடி வன்முறைச் சம்பவம் ஒன்றை நடத்த திட்டமிட்டமை தொடர்பில் விசாரணையை நடத்த சந்தேகத்தின் அடிப்படையில் 14 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் பி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

பொலிஸாரின் இந்த மாற்றத்துக்கு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு இருந்துள்ளமை வெளிப்படுத்தப்படுகிறது.

அதாவது கட்சி மீது பழி விழாமல் இளைஞர்கள் 14 பேரும் ரவுடிகள் என்ற வகையில் இந்த வழக்கு பொலிஸாரால் சோடிக்கப்பட்டுள்ளது.

அதனைவிட யாழ்ப்பாணம் பொலிஸாரால் புதுவகையான பி அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றில் சந்தேக நபர்கள் முற்படுத்தப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதாவது சந்தேக நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்களாக அல்லது ஈடுபட முற்பட்டார்களா என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்கள் – சாட்சிகள் – சான்றுப்பொருள்கள் இல்லாத நிலையில் இவ்வாறு நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

எனவே தமிழ் பற்றுள்ள சட்டத்தரணிகள் பாதிக்கப்படும் இளைஞர்கள் சார்பில் முன்னிலையாகி பொலிஸாரின் இந்த நடவடிக்கையை முறியடிக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236