இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை சற்று சரிவு

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று மூன்றாவது நாளாகக் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய் குறைவடைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கோரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், உலக சந்தையில் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூன் 20) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 82 ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 82 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 89 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 90 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236