இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

இன்று முதல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கம்

0

நாடுமுழுவதும் இன்று ஜூன் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை வரை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்து வந்தது.

நாட்டில் கோவிட் – 19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் முற்றாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236