இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

ஜூலை 6ஆம் திகதி பாடசாலைகளில் மணி ஒலிக்கும் ஓசை நாட்டின் ஆரோக்கியத்திற்கான தெளிவான சமிக்ஞை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடங்கியவுடன் மணி ஒலிக்கும் ஓசை நாட்டின் ஆரோக்கியத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகள் பலவற்றுக்கு இன்று நேரில் சென்ற கல்வி அமைச்சர் அங்கு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது அவர் மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கோரோனா தொற்று நோயைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. எனினும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களே கடமைக்குத் திரும்பினர். முதல் கட்டமாக 5,11 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236