இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

வடக்கு நிலவரம் – அபிவிருத்தி தொடர்பில் பிரதமருடன் மாகாண ஆளுநர் பேச்சு

0

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் இன்று (ஜூன் 29) திங்கட்கிழமை காலை சந்தித்தார்.

கோரோனா தொற்று நோய்ப் பரவலுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது மற்றும் கடல் வழியாக இந்தியாவில் இருந்து சட்டவிரோத மீ்ன்பிடிப் படகுகள் வருவதைத் தடுப்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236