இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

அரச, தனியார் துறையினரின் அலுவலக நேரத்தை மாற்றும் பரிந்துரை கையளிப்பு

0

அரச மற்றும் தனியார் துறையின் அலுவலக நேரங்களைத் திருத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஆலோசனைக் குழுவால் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச துறையினருக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 4.45 மணிவரையும் தனியார் துறையினருக்கும் முற்பகல் 9.45 மணி தொடக்கம் மாலை 6.45 மணிவரையும் வேலை நேரமாக மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அலுவலக நேரங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அண்மையில் ஒரு குழுவை நியமித்தார்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன இன்று காலை அமைச்சர் அமரவீரவிடம் கையளித்தார்.

கோரோனா வைரஸ், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், அரசு மற்றும் தனியார் துறைகளின் செயல்திறனை அதிகரிப்பதன் காரணமாக செயல்படுத்தப்படும் சமூக தூரத்தை பராமரிப்பதற்காக வேலை நேரங்களை திருத்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இந்த அறிக்கை பொது நிர்வாக அமைச்சிடமும் ஒப்படைக்கப்படும், அதே நேரத்தில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படுத்துவது குறித்த முடிவு அந்த அமைச்சினால் எட்டப்படும் என்று அறியப்படுகிறது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236