இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் இன்று முதல் விநியோகம்

0

2020 பொது தேர்தலுக்கான தபால்மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இன்று(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால்மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

எதிர்வரும் ஜூலை 14,15,16,17,20 மற்றும் 21ஆம் ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236