ஏ.எல் பரீட்சை திகதி அட்டவணை குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு

0

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் திகதி அட்டவணை குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் திகதிகள் குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார்.