பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசி வழங்கிய மணிவண்ணன்

0

பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

தாவடி பகுதியில் உள்ள பாடசாலை மதிலில் வி. மணிவண்ணனின் பெயர் பெரிதளவில் வெள்ளை வர்ணத்தில் எழுதி, அருகில் கட்சி சின்னமும், அவரது விருப்பு எண்ணும் வரையப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அறிந்து கொண்ட சட்டத்தரணி மணிவண்ணன் , இத்தகைய செயற்பாடுகள் விரும்பதகாத செயற்பாடு என தெரிவித்து , உடனடியாக குறித்த பாடசாலை மதிலுக்கு புதிதாக வர்ணம் பூசி கொடுத்துள்ளார்.

அத்துடன் தனக்கு ஆதரவு தெரிவிப்போர் , இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நேரங்களில் வீதிகள் உள்ளிட்டவற்றில் பல வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கட்சி சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் , விருப்பு இலக்கம் என்பவற்றை வரைந்து அசிங்கப்படுத்தி வருவதாக பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்து வரும் நிலையில், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அத்தகைய செயற்பாடுகளை கண்டித்து , முன்னுதாரணமாக நடந்து கொண்ட செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.