குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் பட்டியல் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைப்பு

0

உள்ளூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரச புலனாய்வு பிரிவு வழங்கிய பட்டியல் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையில் கடந்த வாரம் 82 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.