வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு; குசால் மெண்டிஸ் கைது

0

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ், வாகன விபத்தில் முதியவரின் உயிரிழப்புக் காரணமானார் என்ற குற்றச்சாட்டில் பாணாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணாந்துறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் 64 வயதுடைய முதியவர் உயிரிழந்தார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் குசால் மெண்டிஸ் செலுத்திச் சென்ற கார் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.