போதைப்போருள் கடத்தலை ஒழித்தல், கோரோனா தடுப்பு; கடற்படைக்கு இரு பெரும் பொறுப்புகள் என்கிறார் பேச்சாளர்

0

வடக்கில் போதைப்பொருள், மற்றும் கோரோனா தொற்றுக்கு எதிராக கடற்படையினர் போராடவேண்டிய நிலை காணப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கோரோனா காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் வடக்கு கடல்மார்க்கம் ஊடாக போதைப்பொருள் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.

கடற்படையினர் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும், கோரோனா தொற்றுக்கு எதிராகவும் போராடவேண்டிய நிலை உள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர் மற்றும் கடலோர காவற்படையினர் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது இலங்கைக்குள் நுழைய முற்படும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களினால் கோரோனா தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

இவற்றில் இருந்தும் போதைப்பொருள் கடத்தலில் இருந்தும் நாட்டினை பாதுகாக்கவேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

ஜனாதிபதி மற்றும் கடற்படைத் தளபதியின் உத்தரவுக்கு அமைய இலங்கை கடற்பரப்பில் தற்போது கடற்படையினரின் சுற்றுகாவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருள்களை நாட்டுக்கு கடத்தும் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். அதே போல் புலனாய்வுதுறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

அதே போல் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இலங்கை குடிமகன்கள், மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் விமானப்படையினருடன் இணைந்து கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர் – என்றார்.