யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த சிறிதேவி ரயில் தடம்புரள்வு; வடக்குக்கான சேவைகள் தாமதம்

0

வவுனியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையிலிருந்து இன்று காலை கொழும்பு பயணித்த சிறிதேவி தொடருந்தே வவுனியா இரட்டைப் பெரியகுளத்தில் ரயில் பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதனால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மதவாச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.