லங்காபுர பிரதேச செயலக ஊழியரின் உறவினருக்கும் கோரோனா

0

பொலநறுவை லங்காபுர பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிலையில் அவரது உறவினர் ஒருக்கும் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கந்தகாடு மறுவாழ்வு மையத்தில் கோரோனா தொற்றுடன் கண்டறியப்பட்ட நோயாளியுடன் இந்த உத்தியோகத்தருக்கு நெருக்கமான தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நோயாளியுடன் நேரடித் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே லங்காபுர பிரதேச செயலக ஊழியரின் உறவினர் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.