மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடனேயே தேசியக் கட்சியில் பயணிக்கின்றேன் – அங்கஜன் இராமநாதன் பேச்சு

0

மக்கள் சேவையை மையமாகக் கொண்டே, தாம் ஒரு தேசிய கட்சியில் பயணிக்க தீர்மானித்ததாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

அங்கஜனுக்கு போடப்படும் வாக்கு தேசியக் கட்சி அளிக்கப்படும் வாக்கு – இது சிங்களக் கட்சிக்கு வழங்கப்படும் வாக்கு – இது கோத்தாபய ராஜபக்சவுக்கு போகும் வாக்கு என்று சரவணபவன் ஐயா தெரிவித்துள்ளார்.

முதலில் பகுத்தறிவு இருக்கவேண்டும். ஜனாதிபதி வேறு கட்சி, நான் வேறு கட்சி. இரண்டாவது தேசியக் கட்சி என்றால் மூவின மக்களும் இருக்கின்ற கட்சியாகும்.
2010ஆம் ஆண்டு அரசியலுக்கு வரும் என்னுடைய நோக்கம், எமது மக்களுக்கு முடிந்தளவு பங்களிப்புச் செய்து அவர்களுடைய முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாகும்.

உதாரணத்துக்கு யாழ்ப்பாணம் நகருக்கு செல்லவேண்டுமாயின் பேருந்திலும் போகலாம், மோட்டார் சைக்கிளிலும் போகலாம், காரிலும் போகலாம், முச்சக்கர வண்டியிலும் போகலாம். நோக்கம் நகருக்குச் செல்லவேண்டுமாயின் எந்த வாகனத்திலும் செல்ல முடியும்.

அதுபோலவே என்னுடைய நோக்கம் மக்களுக்குச் சேவை செய்து அவர்களுடைய முன்னேற்றத்துக்காகப் போராடவேண்டும். அதனடிப்படையில்தான் அந்த நேரம் நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே செயற்பட முடிந்தது. அதனால் அந்தக் கட்சியில் இணைந்து கொண்டேன் – என்றார்.