3 மாவட்டங்களில் தமிழ் கூட்டமைப்பும் 17 மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவும் வெற்றிபெறும் – பசில் ராஜபக்சவின் கணிப்பு இது

0

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர, ஏனைய 17 மாவட்டங்களிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்ளும் என்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று அவர் கணித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவற்றைத் தெரிவித்தார்.

“திருகோணமலை, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களுக்கிடையில் கடும் போட்டி நடைபெறுகிறது என்றும் மற்ற 17 மாவட்டங்களில் பொதுஜனப் பெரமுனவுக்கு வெற்றி கிடைக்கும்.

அத்துடன், 130 முதல் 135 ஆசனங்களை எமது கட்சி வெற்றி பெறும்” என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.