புதிய பிரதமராக மகிந்த ஞாயிறன்று பதவியேற்பு

0

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச, நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு களனி ராஜமகா விகாரையில் பதவியேற்பார் என்று அறவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன 146 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்ற நிலையில் அதன் தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றம் வரும் 30ஆம் திகதி கூடவள்ளது.