மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை கறுப்புத் துணியால் மூடி நீதிகேட்டுப் போராட்டம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் குற்றசாட்டுகள் எழுந்ததை அடுத்து, சசிகலா அவர்களும் தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டு உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலையே இன்றைய தினம் காலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியினால் மூடப்பட்டு உள்ளதுடன், கைகள் மற்றும் கால்கள் சிவப்பு மஞ்சள் துணியினால் கட்டப்பட்டு உள்ளன.

இதேவேளை, தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் சசிகலா ரவிராஜ் முறையிட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.