சசிகலாவுக்கு நீதிகேட்டு மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு முன் போராட்டம்

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் துணைவியாருமான சசிகலாவுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பதில் அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நீதி கிடைக்கப்படவேண்டும் என்று கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு முன்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜூக்கு விருப்புவாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.