தங்கத்தின் விலை 110,000 ரூபாயாக எகிறியது

0

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உயர்வடைந்து வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கோரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வடைந்து வருகிறது.

இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தாண்டியுள்ளது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு ஆயிரத்து 500 உயர்ந்துள்ளது. நேற்று அதன் விலை திடீரென்று 4 ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரித்திருந்தது. இதனால் 24 கரட் தூய தங்கம் ஒரு பவுணின் விலை இன்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அத்தோடு 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று அதன் விலை 99 ஆயிரத்து 450 ரூபாயாகக் காணப்பட்டது.