தேசியப் பட்டியல் ஆசனம் பெறுவதில் அத்துரலிய ரத்ன தேரர், ஞானாசார தேரர் இடையே முறுகல்

0

அபே ஜன பல கட்சியின் ஊடாகக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார தேரருக்கும் அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது பல சேனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தில் அந்தக் கட்சியின் ஊடாக ஞானசார தேரர் போட்டியிட முயன்ற போதும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

அபே ஜன பல கட்சியின் தலைவராக அத்துராலியே ரத்ன தேரர் இருக்கிறார். தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பதில் ஞானசார தேரரின் தரப்பும் அத்துராலியே ரத்ன தேரரின் தரப்பும் முரண்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும், அபே ஜன பல கட்சியும் தேர்தலில் தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.