புதிய அமைச்சரவை ஓகஸ்ட் 14ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்கும்

0

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதவியேற்க வாய்ப்புள்ளது.

பதவியேற்பு திகதி, தேர்தல் ஆணைக்குழுவின் இறுதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதைப் பொறுத்தது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் தெரிவித்தார்.

“அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அமைச்சரவை அமைச்சர்களை 30 ஆகக் கட்டுப்படுத்த கட்சி விரும்புகிறது. பதவியேற்பு விழா வரலாற்று சிறப்புமிக்க “மாகுல் மடுவா” அல்லது கண்டியில் உள்ள றோயல் மண்டபத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

நாட்டின் பிரதமராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச, நான்காவது முறையாக நாளை பதவியேற்பார்.

இந்த மாதம் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது.

இதேவேளை, தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலை வரும் 14 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.