மேலும் 23 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறிவு

0

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேர் இன்று (ஓகஸ்ட் 10) திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் 23 பேருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 867ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

இதுவரை 2 ஆயிரத்து 593 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

263 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.