கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறுவதாக வரும் செய்தி பொய்யானது- செல்வம் விளக்கம்

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரிந்து செயல்படவுள்ளதாக வெளியாகிய செய்தியானது எந்தவொரு அடிப்படையும் அற்றது என்று அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கூட்டமைப்பிற்கு நாடாளுமன்றில் தேசிய பட்டியல் ஊடாக கிடைத்த ஆசனத்தை எமது சம்மதம் இன்றி வழங்கிவிட்டனர் என நாம் கூறினோம். அதனைச் சாட்டாக வைத்து கூட்டமைப்பினை உடைக்க நாம் காரணமாக இருக்கவே மாட்டோம். அவ்வாறு நாம் எப்போது உடைவோம் என சிலர் காத்திருப்பதும் அதற்காக முயற்சிப்பவர்களும் எம்மோடு இருந்து வெளியேறிய சிலர் என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.

எம்மை பகடையாக வைத்து தமிழ் அரசுக் கட்சியின் தலைவரையும் பிரிக்கலாம் என்றும் அதனால் கூட்டமைப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பக்கம் சாய்வார்கள் எனவும் தவறான தகவலை செய்தியாக கொண்டோடித் திரிகின்றனர். இந்த விடயங்களில் எந்த உண்மையும் கிடையாது.

எமது கட்சியை பொறுத்த மட்டில் தமிழ் மக்களினது இருப்பிற்கும் விடிவிற்காகவும் செயற்படும் அதேநேரம் தற்போது போன்று கூட்டமைப்பில் மேலும் பலமாகவே பயணிப்போம். இதனை நான் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களிடமும் தெரிவித்துள்ளேன் -என்றார்.