யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை சற்று சரிவு

0

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் சற்றுக் குறைவடைந்துள்ளது. இன்று (ஓகஸ்ட் 11) செவ்வாய்க்கிழமை பவுணுக்கு 500 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

கோரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 22 ஆம் திகதி 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டியது.

அதனை தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூலை 31 ஆம் திகதி ஒரு பவுணுக்கு விலை ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை நேற்று ஆயிரம் ரூபாயால் குறைவடைந்தது. இன்று மேலும் 500 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று (ஓகஸ்ட் 11) செவ்வாய்க்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை  99 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 99 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.