அலி சப்ரி நீதி அமைச்சராக நியமனம் – மைத்திரி ஏமாற்றம்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நியமனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிக்கு வந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சரவையில் பதவி வழங்கப்படவில்லை.

கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அரசில் முஸ்லிம் பிரதிநிதி எவரும் அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் அரசில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. அதன்போதே ஜனாதிபதி அலி சப்ரி, நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உழைத்த முக்கியஸ்தர்களில் ஜனாதிபதி அலி சப்ரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.